சென்னை விமான நிலையத்திலிருந்து அந்தமான் உள்ளிட்ட 6 வெளிமாநிலங்களுக்குச் செல்லும் உள்நாட்டு விமானப் பயணிகள் கண்டிப்பாக கரோனா இல்லை என்கிற சான்றிதழுடன் வந்தால் மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானப் பயணிகளுக்கு மட்டுமே இதுவரை கரோனா மருத்துவப் பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்ற நிலை இருந்தது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து வெளி மாநிலங்களுக்குச் செல்லும் விமானப் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் கேட்கப்படவில்லை. ஆனால், தற்போது […]
மறு அறிவிப்பு வரும் வரை இந்தியாவுக்கான விமானப்போக்குவரத்தை நிறுத்தி வைப்பதாக குவைத் அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து நேரடியாகவோ அல்லது வேறு நாடுகளின் வழியாகவோ வரும் அனைத்து விமானப்பயணிகளுக்கும் தடை விதிப்பதாகவும் குவைத் விமானப்போக்குவரத்து இயக்ககம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.அதே நேரம் இந்தியாவுக்கு வெளியே தொடர்ந்து 14 நாட்கள் தங்கியவர்கள் உரிய சோதனைகளுக்குப் பின்பு குவைத்திற்கு வர தடையில்லை. குவைத் குடிமக்கள் மற்றும் அவர்களின் பணியாளர்கள் வரவும் தடை இல்லை. விமான சரக்கு போக்குவரத்துக்கு இந்த தடை பொருந்தாது […]
இந்தியாவில் Covid-19 கிருமித்தொற்று அதிகரித்து வருவதால் தற்போது இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வருகை தருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது அதன் விவரங்கள் பின்வருமாறு . கடந்த 14 நாட்களுக்குள் இந்தியாவுக்குச் சென்ற அனைத்து நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்கள் மற்றும் குறுகிய கால (பாஸ்)பார்வையாளர்கள் சிங்கப்பூர் வழியாக நுழையவோ அல்லது செல்லவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த நடவடிக்கை ஏப்ரல் 23 வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11.59 மணி முதல் நடைமுறைக்கு வருகிறது, மேலும் சிங்கப்பூருக்குள் நுழைய முன் ஒப்புதல் பெற்றவர்களும் இதில் […]
இந்தியாவில் இருந்து பயணிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருப்பதாக தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தடையானது ஏப்ரல் 24 ம் தேதி 23.59 மணி நேரத்திலிருந்து நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த முடிவானது 10 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்றும் 10 நாட்களுக்குப் பின்னர் மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து டிரான்ஸிட் விமானங்கள் மூலமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிப்பவர்களுக்கும் இத்தடை பொருந்தும் என்றும், […]
தமிழகத்தில் ஏப்ரல் 20-ஆம் தேதி முதல். இரவு10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலாகிறது. உள்நாடு / வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக இரவு நேரங்களில் தமிழக விமான நிலையத்தில் தரையிறங்கும் விமான பயணிகளின் கவனத்திற்கு. இரவு நேர ஊரடங்கின் போது ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு பேருந்து போக்குவரத்து செயல்படாது. அதேபோல் மாநிலத்திற்கு இடையிலான பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது. வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வருகை […]
தற்போது சிங்கப்பூரில் நோய்த்தொற்று பரவல் காரணமாக சர்வதேச அளவிலான எல்லைகள் சில நாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளது. சர்வதேச எல்லையில் இருந்து வருகை தருபவர்களுக்கு சிறப்பு மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்பே சிங்கப்பூருக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த வருட இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் சிங்கப்பூருக்கான சர்வதேச எல்லைகள் அதாவது போக்குவரத்துகள் துவங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பிரதமர் தெரிவித்திருக்கிறார் . சர்வதேச நாடுகள் அனைத்துமே தற்போது நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக […]
துபையில் இருப்பவர்களுக்கு விசா நீட்டிப்பு சவுதி வருவதற்காக துபாயில் தங்கியிருந்தவர்கள் விமான தடை காரணமாக சவுதி வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தங்களுடைய விசிட் விசா கட்டணமின்றி மார்ச் 31 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. துபையில் இருப்பவர்கள் இதனை ஆன்லைன் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். The United Arab Emirates government has extended tourist visas in the United Arab Emirates until March 31 due to the […]
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று..!! கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்த குவைத்.. வெளிநாட்டவர்கள் நாட்டிற்குள் நுழைய தடை..!! குவைத் நாட்டில் கொரோனா தொற்றுநோய்களின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கையாக குவைத் அரசானது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஒரு அறிக்கையில், குவைத் அமைச்சரவையானது ஜிம்கள் மற்றும் சலூன்களை மூட உத்தரவிட்டதாக அறிவித்ததுடன், பிப்ரவரி 7 முதல் ஒரு மாதத்திற்கு ஒவ்வொரு நாளும் இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை செயல்படுவதை நிறுத்துமாறு பிற வணிக […]
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முயற்சியாக 20 நாடுகளில் இருந்து வரும் பயணிகள் சவூதி அரேபியாவிற்குள் நுழைய தடை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், அந்நாடுகளில் இருந்து வரும் டிப்ளமேடிக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், சவூதி குடிமக்கள், மருத்துவ பயிற்சியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு மட்டும் சவூதிக்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (பிப்ரவரி 3) இரவு 9 மணி முதல் அமல்படுத்தப்படும் தற்காலிக தடை, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜெர்மனி, அமெரிக்கா, […]
இந்தியா- சிங்கப்பூர்- இந்தியா!- பஸ் பயணத்தை விரும்புபவர்களுக்கு புது அனுபவம் இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பேருந்து சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலம் குர்கானை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பேருந்து சேவையை தொடங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக அறிவித்துள்ளது. மூன்று நாடுகளின் வழியாக இந்த பேருந்து பயணம் செய்யும் பேருந்து பயண ஆர்வலர்களின் மத்தியில் இந்த அறிவிப்பு வரவேற்ப்பை பெற்றுள்ளது. அட்வென்சர்ஸ் ஓவர் லேண்ட் என்ற நிறுவனம்தான் இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பேருந்து […]
Need Help? Chat with us
Where to Travel Next
Hi! Click one of our member below to chat on Whatsapp
The team typically replies in a few minutes.