தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்- வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகளின் கவனத்திற்கு.

தமிழகத்தில் ஏப்ரல் 20-ஆம் தேதி முதல். இரவு10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலாகிறது.

உள்நாடு / வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக இரவு நேரங்களில் தமிழக விமான நிலையத்தில் தரையிறங்கும் விமான பயணிகளின் கவனத்திற்கு.

இரவு நேர ஊரடங்கின் போது ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு பேருந்து போக்குவரத்து செயல்படாது. அதேபோல் மாநிலத்திற்கு இடையிலான பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது.

வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வருகை தரும் விமான பயணிகள் அனைவரும் இ-பாஸ் விண்ணப்பித்து பெறுவது அவசியமாகும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையத்திற்கும் செல்வதற்கு இரவு நேரங்களில் அதாவது ஊரடங்கு அமலில் இருக்கும் நேரங்களில் வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும்.

Need Help? Chat with us