சிங்கப்பூருக்கான சர்வதேச எல்லைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் திறக்க வாய்ப்பு- பிரதமர் லீ

தற்போது சிங்கப்பூரில் நோய்த்தொற்று பரவல் காரணமாக சர்வதேச அளவிலான எல்லைகள் சில நாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளது.

சர்வதேச எல்லையில் இருந்து வருகை தருபவர்களுக்கு சிறப்பு மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்பே சிங்கப்பூருக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த வருட இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் சிங்கப்பூருக்கான சர்வதேச எல்லைகள் அதாவது போக்குவரத்துகள் துவங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பிரதமர் தெரிவித்திருக்கிறார் .

சர்வதேச நாடுகள் அனைத்துமே தற்போது நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக சர்வதேச நாடுகள் தற்போது நோய் தொற்றுக்கான தடுப்பு ஊசிகளை அந்த நாட்டு மக்களுக்கு வழங்கி வருவதால் விரைவில் இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் எல்லைகளை திறப்பதற்கான வாய்ப்புகள் உண்டு என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் சிங்கப்பூர் பிரதமர்.


தற்போது சிங்கப்பூர் அரசு சர்வதேச நாடுகளுடன் தடுப்பூசி சான்றிதழ்கள் தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக பிரதமர் தெரிவித்திருக்கிறார்.

சிங்கப்பூர் தற்போது நோய் பரவலை கட்டுக்குள் வைத்துள்ளதாக சிங்கப்பூர் பிரதமர் திரு. லீ அவர்கள் பிபிசி ஊடக நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்

மேலும் சிங்கப்பூர் அரசு திட்டப்படி இந்த ஆண்டின் முடிவுக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக மேலும் அவர் தெரிவித்திருக்கிறார்

Need Help? Chat with us