இந்தியாவுக்கான விமானப்போக்குவரத்தை ரத்து செய்தது குவைத்

மறு அறிவிப்பு வரும் வரை இந்தியாவுக்கான விமானப்போக்குவரத்தை நிறுத்தி வைப்பதாக குவைத் அறிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து நேரடியாகவோ அல்லது வேறு நாடுகளின் வழியாகவோ வரும் அனைத்து விமானப்பயணிகளுக்கும் தடை விதிப்பதாகவும் குவைத் விமானப்போக்குவரத்து இயக்ககம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.அதே நேரம் இந்தியாவுக்கு வெளியே தொடர்ந்து 14 நாட்கள் தங்கியவர்கள் உரிய சோதனைகளுக்குப் பின்பு குவைத்திற்கு வர தடையில்லை.

குவைத் குடிமக்கள் மற்றும் அவர்களின் பணியாளர்கள் வரவும் தடை இல்லை. விமான சரக்கு போக்குவரத்துக்கு இந்த தடை பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Need Help? Chat with us