கடந்த ஜனவரி 4 2021 ஆண்டு முதல் திருச்சி கோலாலம்பூர் மற்றும் கோலாலம்பூர் திருச்சி மார்க்கமாக விமானங்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இயக்கி வருகின்றது. (Special Flights to Trichy)
இந்நிலையில் நாளை கோலாலம்பூரில் இருந்து திருச்சி செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்பட 6 விமானங்கள் பட்டியலிடப்பட்ட நிலையில் தற்போது மேலும் 6 விமானங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. (Special Flights to Trichy)
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே ஜனவரி 4, 11, 13, 18, 20 மற்றும் 25 ஆகிய தேதிகளில் விமானங்கள் இயக்கப்பட்டது. தற்போது ஜனவரி 12, 15, 19, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் கூடுதல் விமானங்கள் இயக்கப்பட உள்ளது.
பயணிகள் இதற்கான டிக்கெட்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணையதளம் மூலமாகவும், கால் சென்டர்கள் மூலமாகவும் மற்றும் அதிகாரபுரவ ட்ராவல் ஏஜெண்டுகள் மூலமும் பதியலாம்.
அண்டை நாடான இந்தியாவை பொறுத்தவரை பன்னாட்டு விமான சேவை, இந்த மாதம் 31ம் தேதி வரை தொடர்ந்து தடையிலேயே இருக்கும் என்று அந்நாட்டு அரசு அறிவித்தது.
இதனால் பிற நாடுகளில் இருந்து, குறிப்பாக மலேசியாவில் இருந்து மக்கள் பயணிக்க வந்தே பாரத் மூலம் செயல்படும் விமானங்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் கோலாலம்பூர் முதல் தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கு செல்லும் விமானங்களின் பட்டியலை அண்மையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டது.
தமிழகத்தை பொறுத்தவரை திருச்சி மற்றும் சென்னை ஆகிய இரு நகரங்களுக்கு இந்த சேவை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது