இந்தியா – பிரிட்டன் இடையேயான விமானப் போக்குவரத்து வரும் 6ம் தேதி முதல் தொடக்கம்; மத்திய அரசு அறிவிப்பு!

புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தியா- பிரிட்டன் இடையேயான விமானப் போக்குவரத்து வரும் 6 ஆம் தேதி முதல் தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வு பிரிட்டன், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் தொற்று சாதாராண கொரோனாவை காட்டிலும் 70% அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கனடா, துருக்கி ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பிரிட்டன் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு பயணத்தடைகளை விதித்துள்ளன. இதில் மத்திய அரசும் வரும் 7 ஆம் தேதி வரை பிரிட்டன் விமானங்கள் இந்தியாவில் நுழைய தடை விதித்திருந்தது.

இந்நிலையில் இந்தியா – பிரிட்டன் இடையேயான விமானப் போக்குவரத்து வரும் 6 ஆம் தேதி முதல் தொடங்கும் என மத்திய விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்திப்சிங் பூரி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு வரும் 6 ஆம் தேதி முதல் விமான சேவையும் பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு 8 ஆம் தேதி முதல் விமான சேவையும் தொடங்கும். ஒரு வாரத்திற்கு 30 விமானங்கள் இயக்கப்படவுள்ளன. அதில் 15 இந்தியாவில் இருந்தும் 15 பிரிட்டனில் இருந்தும் இயக்கப்படும். இந்த புதிய உத்தரவு வரும் 23 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Need Help? Chat with us