சர்வதேச விமான சேவைகளை மீண்டும் தொடங்கிய குவைத் – பயணிகள் மகிழ்ச்சி!

புதிய வகைக் கிருமிப் பரவல் காரணமாக கடந்த டிச.21 முதல் 10 நாட்களாக விமானநிலையம் மூடப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இன்று (ஜன.2) அதிகாலை முதல் குவைத் சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டு தனது சேவையை தொடங்கியுள்ளது.

இன்று மீண்டும் தொடங்கப்பட்ட விமான சேவையில் 67 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இதில் 37 விமானங்கள் குவைத்தில் இருந்து புறப்பட்டு செல்லும், மீதமுள்ள விமானங்கள் குவைத்திற்கு வரும்.

தொடர்ந்து 10 நாட்களாக விமான சேவையின்றி தவித்த பயணிகள் தற்போது நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

மேலும் குவைத்தில் இருந்து முதல் விமானம் தோஹாவுக்கு சுமார் 110 பயணிகளிடம் புறப்பட்டுள்ளதை தொடர்ந்து, இரண்டாவது விமானம் 120 பயணிகளோடு துருக்கி புறப்பட்டது.

இந்தியா உள்ளிட்ட 35 நாடுகளுக்கு நேரடியாக நுழைவு தடை நடப்பில் உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Need Help? Chat with us

Please enter your phone number
and we call you back soon

We are calling you to phone

Thank you.
We are call you back soon.

Contact us