இந்தியா to கோலாலம்பூர் : நான்கு நகரங்கள் – 16 சிறப்பு விமானங்கள்.!

இந்தியா முதல் கோலாலம்பூருக்கு கூடுதலாக நான்கு நகரங்களில் இருந்து 16 சிறப்பு விமானங்களை வந்தே பாரத் இயக்க உள்ளது. (India KL Special Flights)

இதற்கான அறிவிப்பை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம். (India KL Special Flights)

கடந்த ஜனவரி 4 2021 ஆண்டு முதல் திருச்சி கோலாலம்பூர் மற்றும் கோலாலம்பூர் திருச்சி மார்க்கமாக விமானங்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இயக்கி வருகின்றது.

இந்நிலையில் இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களில் இருந்து 16 சிறப்பு விமானங்கள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இயக்கவுள்ளது.

ஜனவரி 12, 15, 19, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்தும், 14,16,21,23,28,30 ஆகிய தேதிகளில் டெல்லியில் இருந்தும் கோலாலம்பூர் செல்ல உள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்.

மேலும் 16 மற்றும் 30 தேதிகளில் கொச்சியில் இருந்தும் 11 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மும்பையில் இருந்தும் கோலாலம்பூருக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளது.

Need Help? Chat with us