இந்தியாவில் இருந்து சவுதிக்கு நேரடி விமான சேவை சம்பந்தமாக இன்றைய (03-01-2021) GACA அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.

சர்வதேச விமானப் போக்குவரத்தை மீண்டும் துவங்கிய சவூதி அரேபியா..!! பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் அறிவிப்பு..!!

புதிய வகை கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 20 ம் தேதி அன்று சவூதி அரேபியாவில் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு ஒரு வார கால தடை விதித்து தனது நாட்டின் எல்லைகளையும் மூடுவதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

பின்னர், ஒரு வாரத்திற்கு பிறகு மேலும் ஒரு வாரத்திற்கு இந்த தடையானது நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்பொழுது இரு வாரங்கள் முடிவடைந்த நிலையில், தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த விமானப் போக்குவரத்து தடையானது நீக்கப்பட்டு மீண்டும் சர்வதேச விமான சேவைகள் சவூதி அரேபியாவில் இயங்க ஆரம்பித்துள்ளன. மேலும், தனது நாட்டின் நில மற்றும் கடல் எல்லைகளை மீண்டும் திறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 3) காலை 11 மணி முதல் நடைமுறைக்கு வரும் இந்த நடவடிக்கையானது பின்வரும் கட்டுப்பாடுகளை உள்ளடக்கி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகள்:

1. யுனைடெட் கிங்டம் (UK), தென்னாப்பிரிக்கா மற்றும் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட பிற நாடுகளில் இருந்து வரும் சவூதி அரேபியாவிற்குள் வரவிருக்கும் வெளிநாட்டவர்கள் சவுதி அரேபியாவிற்குள் நுழைவதற்கு முன்பு 14 நாட்கள் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத நாடுகளில் தங்கியிருத்தல் வேண்டும்.

2. புதிய கொரோனா வைரஸ் பாதிப்புள்ள நாடுகளிலிருந்து வரும் மனிதாபிமான மற்றும் அவசர நிலை காரணமாக சவூதி அரேபியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட சவூதி குடிமக்கள், 14 நாட்களுக்கு வீடுகளில் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவார்கள். மேலும், அவர்களுக்கு இரண்டு PCR சோதனைகள் மேற்கொள்ளப்படும். முதல் PCR சோதனை நாட்டிற்குள் நுழைந்த 48 மணி நேரத்திற்குள்ளும் இரண்டாவது PCR சோதனை தனிமைப்படுத்தலின் 13 வது நாளிலும் மேற்கொள்ளப்படும்.

3. புதிய வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகளில் இருந்து வரும் பயணிகள், 7 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் மற்றும் அவர்கள் நாட்டிற்குள் வந்த ஆறாவது நாளில் PCR சோதனை எடுக்க வேண்டும்.

4. புதிய வகை வைரஸால் பாதிக்கப்படாத நாடுகளில் இருந்து வரும் பயணிகள், சவூதிக்குள் நுழைந்ததும் 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் அல்லது 3 நாட்கள் வீட்டில் சுயமாக தனிமைப்படுத்தப்பட்டு PCR சோதனை மேற்கொள்ள வேண்டும்.

சவுதி உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பு மற்றும் விமான போக்குவரத்து GACA அறிவிப்பு இவற்றை வைத்துப் பார்க்கும் பொழுது இந்தியாவில் இருந்து சவுதிக்கு நேரடி விமான சேவை சம்பந்தமாக எந்த அறிவிப்பும் குறிப்பிடப்படவில்லை. மேலும் சவுதியில் இயங்கும் இந்திய ஊடகங்கள் மற்றும் தன்னார்வலர்களும் இந்த அறிவிப்பை வைத்து பார்க்கும் பொழுது இந்தியாவிற்கான தடை இன்னும் நீக்கப்படவில்லை என்பதாக கூறியுள்ளனர்…

மேலும் சவுதி வருவதற்காக துபாயில் தங்கி உள்ள இந்தியர்கள் இன்று முதல் சவுதி அரேபியாவிற்கு வரலாம். கோவிட் நடை முறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் Pcr டெஸ்ட் எடுத்திருக்க வேண்டும். சவுதி வந்தபிறகு ஏழு நாள் தனிமைப்படுத்துதல் அல்லது மூன்று நாட்கள் கழித்து pcr டெஸ்ட் சாதாரண நடைமுறைக்கு திரும்பலாம்.

 

 

Need Help? Chat with us