இந்த மாதம் அதாவது ஜனவரி 5ஆம் தேதி முதல் சிங்கப்பூரில் இருந்து தமிழகம் செல்லக்கூடிய மீட்பு விமானங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது சிங்கப்பூர் இந்திய தூதரகம்.
சிங்கப்பூரில் இருந்து திருச்சி, மதுரை சென்னை ஆகிய முக்கிய நகரங்களுக்கு வந்தே பாரத் திட்டத்தில் விமானங்கள் இயக்கப்படுகிறது இந்த விமானத்திற்கான பட்டியலை சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் இந்திய தூதரகம் தற்போது வெளியிட்டுள்ளது.
இந்த விமானத்தில் பயணிக்க விரும்பும் பயணிகள் தங்களுக்கான பயணச் சீட்டுகளை அதிகாரப்பூர்வ முகவர்கள் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு விமானங்களில் பயணிக்க விரும்பும் பயணிகள் அனைவருக்கும் மருத்துவ முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை அனைத்தும் பொருந்தும்.