இந்தியாவில் Covid-19 கிருமித்தொற்று அதிகரித்து வருவதால் தற்போது இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வருகை தருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது அதன் விவரங்கள் பின்வருமாறு .
கடந்த 14 நாட்களுக்குள் இந்தியாவுக்குச் சென்ற அனைத்து நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்கள் மற்றும் குறுகிய கால (பாஸ்)பார்வையாளர்கள் சிங்கப்பூர் வழியாக நுழையவோ அல்லது செல்லவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இந்த நடவடிக்கை ஏப்ரல் 23 வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11.59 மணி முதல் நடைமுறைக்கு வருகிறது, மேலும் சிங்கப்பூருக்குள் நுழைய முன் ஒப்புதல் பெற்றவர்களும் இதில் அடங்குவதாக கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் வியாழக்கிழமை (ஏப்ரல் 22) தெரிவித்தார்.
மேலும் அண்மையில் இந்தியாவிற்கு பயணம் செய்து வந்தவர்கள் அதாவது ஏப்ரல் 22 இன்று நள்ளிரவு 11 :59 மணி நிலவரப்படி 14 நாட்கள் இல்லத்தில் தனிமையில் இருக்கும் உத்தரவை நிறைவேற்றி முடிக்காதவர்கள் மேலும் 7 நாட்கள் குறிப்பிட்ட அதாவது பிரத்தியேக வசிப்பிடத்தில் தனிமைப்படுத்தும் உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாம் அலை தொற்று அதிகரித்து வருவதால் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இந்த நடைமுறை தற்போது சிங்கப்பூரில் அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது