இந்தியா- சிங்கப்பூர்- இந்தியா!- பஸ் பயணத்தை விரும்புபவர்களுக்கு புது அனுபவம்
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பேருந்து சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலம் குர்கானை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பேருந்து சேவையை தொடங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக அறிவித்துள்ளது. மூன்று நாடுகளின் வழியாக இந்த பேருந்து பயணம் செய்யும் பேருந்து பயண ஆர்வலர்களின் மத்தியில் இந்த அறிவிப்பு வரவேற்ப்பை பெற்றுள்ளது.
அட்வென்சர்ஸ் ஓவர் லேண்ட் என்ற நிறுவனம்தான் இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பேருந்து சேவையை வழங்க உள்ளது மணிப்பூர் மாநிலங்களில் இருந்து வரும் நவம்பர் 14ஆம் தேதி இந்த பேருந்து சேவை தொடங்குகிறது இதற்கான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொள்வதற்கு பயணிகளுக்கு தற்போது அட்வென்சர்ஸ் ஓவர் லேண்ட் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
சிங்கப்பூர் செல்வதற்கு முன்பாக மியான்மர் தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் வழியே இந்த பேருந்து பயணம் செய்யும் மியான்மரின் காலோ மற்றும் யங்கூன் தாய்லாந்தின் பாங்காக் மற்றும் கிராபி மலேசியாவின் கோலாலம்பூர் ஆகியவற்றை இந்த பயணத்தின் முக்கிய நகரங்களாக குறிப்பிடலாம் .
இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூரில் இருந்து இந்தியா என்ற தனித்தனியாக இந்த பேருந்து சேவை வழங்கப்படும் ஒவ்வொரு கட்டத்திற்கும் 20 இருக்கைகள் கொண்ட பேருந்து மட்டுமே பயன்படுத்தப்படும் முதலில் வருபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை என்ற அடிப்படையில் முன்பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படும் .
இந்தப் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் நிறைவு செய்வதற்கு சுமார் 20 நாட்களை எடுத்துக்கொள்ளும் பயணிகளுக்கு சவுகரியமாக பயணத்தை உறுதி செய்யும் வகையில் சகல வசதிகளுடன் கூடிய பேருந்து இந்த சேவையில் பயன்படுத்தப்படும் என அட்வென்சர்ஸ் ஓவர் லேண்ட் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஒட்டுமொத்தமாக இந்த பேருந்து 5 நாடுகளின் வழியாக பயணிக்க உள்ளது இதில் பங்கேற்கும் பயணிகள் சாலை மார்க்கமாகவே சுமார் 5816 கிலோ மீட்டர்கள் பயணம் செய்யலாம் இந்த விமானத்தில் சில மணி நேரங்களில் கடந்துவிடலாம் ,சாலை வழியாக பயணம் பயணிகளுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என்பது உறுதி