சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணியிடம் 249 கிராம் தங்கம் பறிமுதல்

கொரோனா பரவல் காரணமாக பன்னாட்டு விமான சேவைகளை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை மீட்க சில நாடுகளுக்கு சிறப்பு விமான சேவை தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.

அந்த விமானங்களில் வரும் பயணிகளிடம் சமீப காலமாக கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல் செய்யப்படுகின்றன.

சிங்கப்பூரில் இருந்து 2 நாட்களுக்கு முன்பு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திருச்சிக்கு வந்த தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சேர்ந்த ரவிச்சந்திரன் (34) என்ற பயணியிடம் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது, அவரின் சூட்கேசில் மறைத்து வைத்த 249 கிராம் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

அதேபோல துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த அப்துல் ரசாக் (40) என்ற பயணி சட்டையில் 1 கிலோ 173 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடத்தல் தங்கத்தின் இந்திய மதிப்பில் சுமார் 73 லட்சம் ஆகும்.

Need Help? Chat with us