ஓமானில் மீண்டும் துவங்கப்படவிருக்கும் சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை..!! எல்லைகள் திறக்கப்படும் எனவும் அறிவிப்பு..!!

ஐரோப்பிய நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததை தொடர்ந்து பல்வேறு நாடுகள் பயணக்கட்டுப்பாடுகளை அறிவித்தன. அதில் ஓமான் நாடானது ஒரு வாரத்திற்கு சர்வதேச விமான போக்குவரத்திற்கு தடை விதித்து மற்ற நாடுகளுடனான தனது எல்லைகளை மூடுவதாகவும் அறிவித்திருந்தது.

புதிய வகை கொரோனா வைரசிற்கு எதிராக பல்வேறு நாடுகள் விதித்து வரும் கட்டுப்பாடுகளை தொடர்ந்தும் புதிய வைரஸ் வேகமாகப் பரவி வருவதன் காரணத்தாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஓமான் அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், வரும் டிசம்பர் 29 செவ்வாய்க்கிழமை (12.00 am) முதல் இத்தடைகளானது நீக்கப்பட்டு நாட்டின் எல்லைகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் சர்வதேச விமானப் போக்குவரத்து மீண்டும் துவங்கப்படும் என்று கொரோனாவிற்கான உச்சக்குழு தெரிவித்துள்ளது.

Need Help? Chat with us